[Tamil] MS Word, PowerPoint and Excel Course In Tamil
Learn MS Office in Tamil! Master Word, Excel, PowerPoint & more. Perfect for beginners & professionals. Boost your skills today!
Course Content
[Tamil] MS Word, PowerPoint and Excel Course In Tamil is a beginner-level Udemy course taught by Antony Gladson. It runs 1h 53m and is taught in English. Learners rate it 4.2 out of 5 from 89 reviews, with 1,932 students enrolled. It is free to enroll, last updated September 2022.
வணக்கம்! Techysaw-இல் உங்களை வரவேற்கிறோம். Vijanthi Computer Institute மூலம் 2 வருடங்களாக கணினி பயிற்சி அளித்து வருகிறேன். மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான தேவையை உணர்ந்து, MS Word, PowerPoint, மற்றும் Excel ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான பயிற்சி வகுப்பை வழங்குகிறேன்.
இந்த பயிற்சி, ஆரம்பநிலையாளர்கள் முதல் வேலை தேடுபவர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
MS Word பயிற்சி:
- ஆவண உருவாக்கம்: Word document-களை உருவாக்குவது மற்றும் திறம்பட நிர்வகிப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
- Resume தயாரித்தல்: தொழில்முறை resume-களை உருவாக்குவதற்கான வழிமுறைகளை தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.
- Shortcut Keys: நேரத்தை மிச்சப்படுத்தும் shortcut keys-களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
- Project Documentation: பிழையில்லாத, சிறந்த project documentation-களை உருவாக்குவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
MS PowerPoint பயிற்சி:
- Design திறன்கள்: உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப stunning presentations உருவாக்குவது எப்படி என்பதை அறிக.
- Option கையாளுதல்: PowerPoint-இல் உள்ள பல்வேறு options-களை திறம்பட பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
- Transitions & Animations: presentations-இல் transitions மற்றும் animations சேர்ப்பதன் மூலம் பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாக்குவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
- Animation to Video: PowerPoint animations-களை வீடியோவாக மாற்றுவது எப்படி என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Microsoft Excel பயிற்சி:
- Formula பயன்பாடு: Excel-இல் உள்ள formulas-களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விரிவாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
- Formula தேர்வு: எந்த சூழ்நிலையில் எந்த formula-வை பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
- வேலைக்கான Concepts: வேலைக்கு தேவையான அனைத்து முக்கிய concepts-களையும் கற்றுக்கொண்டு, வேலையை விரைவாகவும் திறமையாகவும் செய்து முடிக்கலாம்.
சந்தையில் இந்த பயிற்சி வகுப்புகளுக்கு 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை செலவாகும். ஆனால், எங்களுடைய பயிற்சி வகுப்பில் நீங்கள் இலவசமாக, உங்கள் இடத்தில் இருந்தே அனைத்து திறன்களையும் கற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்!
Need a web app built? Hire the team behind TutorialSearch.io
We ship fast, production-grade full-stack apps (Next.js, React, edge infra) — the same stack that powers this site.