முழுமையான டேலி ஈஆர்பி ஜிஎஸ்டி உடன் தமிழ் வழியில்
Learn Tally ERP in Tamil! Master accounting software for businesses. Comprehensive training, easy to understand. Boost your business skills today.
Course Content
முழுமையான டேலி ஈஆர்பி ஜிஎஸ்டி உடன் தமிழ் வழியில் is an all-levels Udemy course taught by Shiva G. It runs 8h 59m, is taught in English, and includes a certificate of completion. Learners rate it 4.3 out of 5 from 41 reviews, with 179 students enrolled. It is a paid course, first published November 2020.
வணக்கம்! நான் ஜி. சிவா, கடந்த 20 வருடங்களாக கணிணி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறேன். பல மென்பொருள்களைப் பயிற்றுவித்து மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறேன். தற்போது, இணையத்தில் ஆன்லைன் பயிற்சிகளை வழங்கி வருகிறேன்.
- தமிழ் டைப்பிங் பயிற்சி
- இங்கிலீஷ் டைப்பிங் பயிற்சி
- வேர்ட் (Word) பயிற்சி
- எக்செல் (Excel) பயிற்சி
- பவர்பாயிண்ட் (PowerPoint) பயிற்சி
போன்ற ஆன்லைன் பயிற்சிகள் ஏற்கனவே வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இப்போது, எனது ஆன்லைன் பயிற்சிப் பிரிவில் ஒரு புதிய மைல்கல்! டேலி ஈர்பி (Tally ERP) உடன் ஜிஎஸ்டி (GST) பயிற்சி!
சிறு மற்றும் பெரிய நிறுவனங்களில் அலுவலகப் பணியில் இருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மென்பொருள் இது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அறிமுகமான பிறகு, டேலி மென்பொருளின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரிகளை எளிதாகச் செலுத்த, அனைவரும் இந்த மென்பொருளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
எங்கள் நிறுவனத்தில் படிக்கும் பல மாணவர்கள், படிக்கும்போதே வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர். நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், குறிப்பாக அலுவலகப் பணிக்கு வேலை தேடுபவராக இருந்தால், இந்த பயிற்சி உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.
தனியார் பயிற்சி நிறுவனங்களில் இந்த பயிற்சியின் கட்டணம் ரூ. 5000 முதல் ரூ. 8000 வரை இருக்கும். ஆனால், நாங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த டேலி பயிற்சியை வழங்குகிறோம். அக்கௌண்டிங் அறிவு இல்லாமலேயே இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.
இந்த பயிற்சியில், டேலியில் அடிப்படைகள் முதல் ஜிஎஸ்டி, பேரோல் போன்ற அனைத்து மேம்பட்ட அம்சங்களையும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுத் தருகிறோம். 8-ம் வகுப்பு மாணவராக இருந்தாலும், பி.காம், எம்.காம் போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கும் இந்த டேலி பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
கணிணி கல்வித் துறையில் உள்ள எனது 20 வருட அனுபவத்தின் அடிப்படையில், இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயிற்சியில் சேருபவர்களுக்கு டேலி ப்ரைம் பயிற்சியையும் இலவசமாக வழங்குகிறோம். டேலி மென்பொருளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப எங்கள் பாடத்திட்டங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.
ஒருமுறை இந்த பயிற்சியில் சேர்ந்துவிட்டால், பாடங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்குச் சொந்தமானவை. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இந்த பயிற்சி மூலம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற எனது வாழ்த்துகள்!
- ஜி. சிவா
உடிமி ஆசிரியர்.
Need a SaaS MVP shipped fast? Hire the TutorialSearch.io team
Auth, billing, dashboards and AI features — a launch-ready product built by the devs behind this site.